ADDED : ஜூன் 23, 2026 01:19 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், சக்கரத்தாழ்வார் ஜெயந்தி விழா நேற்று துவங்கியது. இதையொட்டி காலையில், காயத்ரி மந்திரம், மாலா மந்திரம் ஜபம், லட்ச ஆவர்த்தி ஹோமம் நடைபெற்றது. மதியம் முதல் கால பூர்ணாகுதி, மஹா தீபாராதனை சாற்று-முறை, மாலையில் இரண்டாவது கால லட்ச ஆவர்த்தி ஹோமம், இரவில் இரண்டாம் கால பூர்ணாகுதி, மஹா தீபாராதனை சாற்றுமுறை நடந்தது.
இதில் பரவாசுதேவர் அலங்காரத்தில் அருள்பா-லித்த சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெ-ழுச்சி உட்பட பல்வேறு பூஜை நாள் முழுவதும் நடக்கிறது.இறுதி நாளான நாளை காலை திவ்ய பிரபந்த வேத பாராயணம், மஹா கும்ப ஆராதனம் நடக்-கிறது. மாலையில் கஸ்துாரி ரங்கநாதருக்கு திருக்கல்யாண உற்சவம், ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றப்பட்டு விழா நிறைவடைகி-றது.
