ADDED : டிச 28, 2025 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கோவை சரக காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் குமரேஷ்ஆசனுார், சரவணன் கொடுமுடி, இளங்கோசத்தி, ராஜேஸ்வரிபெருந்துறை மகளிர் ஸ்டேஷன், ஜெகநாதன் காஞ்சிகோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். பெருந்துறை மகளிர் இன்ஸ்., மகாலட்சுமி ஊட்டி மதுவிலக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பவானி போக்குவரத்து பிரிவு சரவணகுமார், காங்கேயம் போக்குவரத்து பிரிவு, அந்தியூர் போக்குவரத்து பிரிவு கஸ்துாரி, பவானி போக்குவரத்து பிரிவு, கோபி போக்குவரத்து பிரிவு பதி, கோவை ஆயுதப்படை, ஈரோடு ஆயுதப்படை பழனிச்சாமி, கோபி போக்குவரத்து பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி., சசிமோகன் பிறப்பித்துள்ளார்.

