ADDED : ஜூலை 04, 2026 04:22 AM
ஈரோடு:கரூர்
ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து
வருகிறது. இதனால் இன்று (4) சில ரயில்களின் பயணம் மாற்றி அமைக்கப்படுகிறது.
ரயில்
எண்: 16811 - மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில்
மயிலாடுதுறையில் இருந்து காலை, 6:15 மணிக்கு புறப்பட்டு,
வீரராக்கியம் ஸ்டேஷனில் நிறுத்தப்படும். அங்கிருந்து சேலம் வரை
இயக்கப்படாது.
அதுபோல, ரயில் எண்: 16812 - சேலம் - மயிலாடுதுறை
எக்ஸ்பிரஸ் ரயில் சேலத்தில் இருந்து மதியம், 2:05 மணிக்கு
புறப்படுவதற்கு பதில், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மதியம், 3:40
மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும். சேலம் - கரூர் வரை
இயக்கப்படாது.
ரயில் எண்: 16844 - பாலக்காடு டவுன் - திருச்சி
எக்ஸ்பிரஸ், பாலக்காட்டில் இருந்து காலை, 6:30 மணிக்கு புறப்பட்டு,
ஈரோடு - கொடுமுடி இடையே பாசூர் ரயில்வே ஸ்டேஷனுடன் நிறுத்தப்படும்.
பராமரிப்பு பணி முடிந்த பின், பாலக்காடு டவுனில் இருந்து - திருச்சி வரை
முழுமையாக இயக்கப்படும்.
அதுபோல ரயில் எண்: 16322 - கோவை -
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை, 8:00 மணிக்கு கோவையில்
புறப்பட்டு, வழித்தடத்தை மாற்றி போத்தனுார், பொள்ளாச்சி, பழனி
வழியாக திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.
வழக்கமாக இந்த ரயில்,
கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லுார், இருகூர், சூளூர் ரோடு,
சோமனுார், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பாசூர்,
கொடுமுடி, புகளூர், கரூர், பாளையம், எரியோடு வழியாக திண்டுக்கல்
செல்லும். சீரமைப்பு பணிக்கு பின் இவ்வழியாக இயக்கப்படும்.
இத்தகவலை சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
