ADDED : மே 08, 2026 04:03 AM

அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர் அருகே புதுப்பாளையத்தில் கொன்னமரத்தையன் கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடக்கிறது.
நடப்பாண்டு விழா, 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து கொன்னமரத்தையன் சுவாமியை, வனக்கோவிலுக்கு சப்பரத்தில் பக்தர்கள் சுமந்து சென்றனர். அங்கு கொன்னமரத்தையனுக்கு சிறப்பு பூஜை நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்தனர்.விழாவில் புதுப்பாளையம், கிருஷ்ணாபுரம், சங்கராப்பாளையம், அந்தியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் ஆடுகளை பலி கொடுத்தும், பெண்கள் பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
