ADDED : ஆக 14, 2025 02:36 AM
ஈரோடு, சுதந்திர தினத்தை ஒட்டி, ஈரோடு ரயில்வே போலீசார், பயணிகளின் உடமைகளை பரிசோதித்தனர்.
சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் கண்காணிப்பு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு ரயில்வே போலீசார் ரயில்வே ஸ்டே ஷன், பாலங்கள், புக்கிங் அலுவலகம், ரயில் பாதைகளில் வரும், 16 காலை வரை பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபட உள்ளனர். ஈரோடு காவிரி ரயில்வே பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளின் உடமைகள் பரிசோதிக்கப்பட்டது. வெடிகுண்டு கண்டறியும் சோதனை கருவிகளை கொண்டு, பயணிகள் உடமைகள் ஸ்கேன் செய்யப்படுகிறது. அதன் பின்னரே, ஸ்டேஷனுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இதே போல் பஸ் ஸ்டாண்ட், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் இன்று 14 மாலை முதல் ஈடுபடுவர். மேலும் லாட்ஜ்கள், தனி பண்ணை வீடுகளிலும் போலீசார் கண்காணிப்பு, ரெய்டு மேற்கொள்ள உள்ளனர்.