ADDED : மார் 06, 2026 04:16 AM

அ நிறம் | அளவு
பவானி: பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாக கூடுதுறையில் இருந்த தேருக்கு, செல்லியாண்டியம்மன் அம்மன் உற்சவர் அழைத்து செல்லப்பட்டார்.
அதை தொடர்ந்து தேர் அலங்கரிக்கப்பட்டு, 10:00 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. நுாற்றுக்கணக்கான பக்தர்களால் வடம் பிடிக்கப்பட்ட தேர், மேட்டூர் மெயின் ரோடு, காவேரி வீதி மற்றும் தேர்வீதி வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது.
மாலையில் கம்பம் எடுக்கப்பட்டு, காவிரி ஆற்றில் விடப்பட்டது. இன்று பாரிவேட்டை, நாளை இரவு தெப்போற்சவம், 8ல் மஞ்சள் நீராட்டுடன் பண்டிகை நிறைவடைகிறது.
