/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறை சிப்காட்டில் சென்னை ரைஸ் அரிசி ஆலை திறப்பு
/
பெருந்துறை சிப்காட்டில் சென்னை ரைஸ் அரிசி ஆலை திறப்பு
பெருந்துறை சிப்காட்டில் சென்னை ரைஸ் அரிசி ஆலை திறப்பு
பெருந்துறை சிப்காட்டில் சென்னை ரைஸ் அரிசி ஆலை திறப்பு
ADDED : ஜன 29, 2026 04:39 AM
பெருந்துறை: சென்னை ரைஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா பி. லிட்., நிறுவ-னத்தின், தென்னிந்தியாவின் மிகப் பெரிய அரிசி ஆலை திறப்பு விழா, ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் நேற்று நடந்தது.
சென்னை ரைஸ் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து பேசுகையில், ''ஆலையில், ஒரு மணி நேரத்திற்கு, 30 டன் அரிசி உற்பத்தி திறனும், ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கிடங்-குகளும் கொண்டது. இந்த புதிய முயற்சி, எங்கள் நிறுவனத்திற்கு ஒரு பெரிய மைல்கல். சுவிட்சர்லாந்து நாட்டின் புளூல்லர் மற்றும் சீனாவின் பேம்சன் தொழில்நுட்பம் கொண்டு இயங்கும். இந்த ஆலையிலிருந்து, தமிழகம் மற்றும் இந்தியா முழுமைக்கும் பெரிய அளவில் உயர் தரமான அரிசியை வழங்க இயலும்,'' என்றார்.
கே.ஆர்.பி.எல் (இந்தியா கேட் அரிசி) நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனில் குமார், சுவிட்சர்லாந்து நாட்டின் புளூல்லர் குழும, நிர்வாக இயக்குநர் மேரி ஓல்வால். சீனாவின் பேம்சன் குழும, தெற்காசியத் தலைவர் ஜார்ஜ், சென்னை அரிசி நிர்வாக இயக்குநர் ராஜ்குமார், கரூர் டி.என்.சி., சிட் பண்ட்ஸ் நிறுவன இளங்கோவன், எழுத்தாளர் சோம. வீரப்பன், பேச்சாளர் ஈரோடு மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை அரிசி நிறுவ-னத்தின் துணைத் தலைவர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.

