/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னை வாலிபருக்கு போக்சோவில் சிறை
/
சென்னை வாலிபருக்கு போக்சோவில் சிறை
ADDED : ஜூலை 27, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு ஈரோட்டை சேர்ந்த, 14 வயது சிறுமி, சமூக வலைதளம் மூலம் சென்னை வாலிபருடன் பழகினார். அவரது ஆசை வார்த்தையை கேட்டு சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார். சிறுமியின் பெற்றோர் சூரம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் தேடியதில் சென்னை, காஞ்சிபுரம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில், மோகன்தாஸ், 23, என்பவருடன் இருப்பது தெரியவந்தது. அவர் சென்னை பூந்தமல்லியில் ஒரு சவுண்ட் சர்வீசில் வேலை செய்கிறார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும் மருத்துவ பரிசோதனையில் உறுதியானது. போக்சோவில் வழக்குப்பதிந்து மோகன் தாஸை கைது செய்து சிறுமியை மீட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் மோகன்தாஸை அடைத்தனர்.