/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை மலைப்பாதை மேம்படுத்தும் பணி துவக்கம்
/
சென்னிமலை மலைப்பாதை மேம்படுத்தும் பணி துவக்கம்
ADDED : ஜூலை 25, 2024 01:20 AM
சென்னிமலை: சென்னிமலை, மலை மீது முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை மேம்படுத்தும் பணியை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று காலை தொடங்கி வைத்தார்.மலை மீது செல்லும் 4 கி.மீ., கொண்ட மலைப்பாதை, ரூ.7.53 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி மற்றும் பக்தர்கள் உண-வருந்தும் கூடம் கட்டும் பணிக்கு நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து, கோவிலில் பணிகள் துவங்க சிறப்பு பூஜை நடந்தது.
முன்னாள் அமைச்சர் தோப்பு. வெங்கடாச்சலம், ஹிந்து சமய அறநிலையதுறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்-லப்பாளையம் சிவக்குமார், சென்னிமலை ஒன்றிய குழு தலைவர் காயத்ரி இளங்கோ, மாவட்ட கவுன்சிலர் செல்வம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், செயல் அலுவலர் சரவணன் மற்றும் பணியா-ளர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.