/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் களைகட்டிய சென்னிமலை கோவில்
/
சுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் களைகட்டிய சென்னிமலை கோவில்
சுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் களைகட்டிய சென்னிமலை கோவில்
சுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் களைகட்டிய சென்னிமலை கோவில்
ADDED : ஆக 03, 2025 01:20 AM
சென்னிமலை, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமிக்கு, ஆடி மாத விசாக நட்சத்திரத்தில், சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர் சங்கம் சார்பாக, பாலாபிஷேகம் நடக்கிறது. நடப்பாண்டு, 58வது ஆண்டாக பாலபிஷேக பெருவிழா நேற்று நடந்தது.
இதையொட்டி காலை, 8:30 மணிக்கு 1,500 திருப்பாற் குடங்களுடன், சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து மேள, தாளம் முழங்க நான்கு ராஜவீதிகளிலும் பக்தர்கள் வீதியுலா சென்றனர். பிறகு மலை மீதுள்ள கோவிலுக்கு, படிக்கட்டு வழி சென்றனர். காலை, 10:40 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் தொடங்கியது. இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மதியம் உற்சவ மூர்த்தி பிரகார உலாக்காட்சி நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவால் மலைக்கோவில் களைகட்டியது.