/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டெல்லி கண்காட்சியில் சென்னிமலை அரங்கு
/
டெல்லி கண்காட்சியில் சென்னிமலை அரங்கு
ADDED : பிப் 17, 2025 02:40 AM
சென்னிமலை: டெல்லியில் பாரத் டெக்ஸ்--2025 சர்வதேச ஜவுளி கண்காட்சி கடந்த, ௧௪ம் தேதி தொடங்கியது. இன்றுடன் முடியும் கண்காட்-சியில், சென்னிமலை கைத்தறி கூட்டுறவு சங்க துணி ரகங்களுக்கு பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னிமலை சென்டெக்ஸ், சென்கோப்டெக்ஸ், காளிக்-கோப்டெக்ஸ், சென்குமார் டெக்ஸ், பி.கே.புதுார் டெக்ஸ் கூட்டு-றவு சங்கங்கள் பங்கேற்றுள்ளன. சென்னிமலை கைத்தறி ரக துணிகள்,மதிப்பு கூட்டப்பட்ட பைகள், வீட்டு சமையல் உப-யோக துணிகள் என தனித்தனியாக அரங்கு அமைத்துள்ளனர். அரங்கை பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,000க்கும் அதிகமான வர்த்தகர்கள் பார்வையிட்டுள்ளதாக, கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை தொழிற் நுட்ப வல்லுனர் குழுவினர் தெரிவித்தனர்.

