/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை ஒன்றிய பா.ஜ., தலைவர் தேர்வு
/
சென்னிமலை ஒன்றிய பா.ஜ., தலைவர் தேர்வு
ADDED : ஜன 26, 2025 04:08 AM
சென்னிமலை: தமிழக பா.ஜ.,வில் உறுப்பினர் சேர்க்கை நடந்து, முதல் கட்ட-மாக தலா, 50 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட கிளைகளில், கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக தகுதி பெற்ற, 50 சதவீத கிளைகள் உள்ள ஒன்றியங்களில், நிர்-வாகி தேர்தல் நடந்து வருகிறது.
சென்னிமலை தெற்கு ஒன்றி-யத்தில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கிளைகள் தகுதி பெற்ற-வையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சென்னிமலை ஒன்றிய தலைவருக்கான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரி மோகன் மருதாச்சலம் தலைமை வகித்தார். இதில் முகாசிபிடாரியூர் ஊராட்சி, 1010 நெசவாளர் காலனியை சேர்ந்த சுந்தர்ராஜ், ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்-கப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

