ADDED : டிச 08, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., சார்பில் செஸ் போட்டி
ஈரோடு, டிச. 8-
துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் மாவட்ட செஸ் போட்டி நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் தலைமை வகித்தார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, போட்டிகளை துவக்கி வைத்தார். செஸ் போட்டிகள், 7, 9, 11, 13, 17 வயதுகளில் நடந்தது. இதில், 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மேயர் நாகரத்தினம், மண்டல தலைவர் தண்டபாணி, நிர்வாகிகள் சச்சிதானந்தம், மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.