ADDED : செப் 11, 2026 06:29 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன்,34. இவர் பாரியூர்
சாலையில், பிராய்லர் சிக்கன் கடை நடத்தி வருகிறார். தகரசீட் கொண்டு
வேயப்பட்ட சிக்கன் கடையை நேற்று அதிகாலை 4:55 மணிக்கு திறக்க அவர்
சென்றார்.
அப்போது கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறியது.
கோபி தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை
அணைத்தனர். ஆனால், அதற்குள் கடைக்குள் இருந்த, 160 பிராய்லர் கோழிகள்,
கோழியை சுத்தம் செய்யும் கருவி உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து
நாசமானது. மின்கசிவால் தீ விபத்து நடந்ததாக, தீயணைப்பு துறையினர்
தெரிவித்தனர்.
