ADDED : ஏப் 02, 2026 05:07 AM
ஈரோடு, கரூரில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு, ஈரோடு வந்து சேர்ந்தார்.
அவரை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்து
சாமி வரவேற்றார். வரும் வழியில், ஈரோடு ராஜாஜிபுரத்தில் மறைந்த ஈரோடு மாவட்ட தி.மு.க., முன்னாள் துணை செயலர் நெடுமாறன், 86, வீட்டுக்கு சென்ற முதல்வர், அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
பின் ஈரோடு, பெருந்துறை சாலை, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சக்தி விருந்தினர் மாளிகையில் முதல்வர் ஓய்வு எடுக்கிறார். இன்று காலை, 5:45 முதல், 6:00 மணிக்குள் ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் உள்ள நடை பயிற்சி மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர். 9:00 மணிக்கு பெருந்துறை சாலை, திண்டல் பஞ்சாபி ேஹாட்டல் அருகே இம்மாவட்டத்தில் உள்ள தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் செய்கிறார்.
கரூர் மாவட்ட செயலர் செந்தில்பாலாஜி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
