ADDED : நவ 19, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, அரசு விழாவில் பங்கேற்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும், 25ம் தேதி மாலை ஈரோடு வருகிறார். 26ல் அறச்சலுார் ஜெயராமபுரத்தில் பொல்லான் மணி மண்டபத்தை திறக்கிறார். ஓடாநிலையில் தீரன் சின்னமலை முழு உருவச்சிலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சோலார் அருகே புறநகர் பஸ் ஸ்டாண்டை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி, அவர் வந்து செல்லும் சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, கோவை டி.ஐ.ஜி., சசிமோகன் நேற்று ஆய்வு செய்தார். போலீசாருக்கு பல்வேறு ஆலோசனை வழங்கினார்.

