ADDED : ஜூன் 03, 2026 03:30 AM
பெருந்துறை:பெருந்துறை அடுத்த, காஞ்சிக்கோவில், சூரியம்பாளையம் பிரிவு, பெருமாள்பாளையம், பொன்னுசாமி தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி பொன்னுசாமி. இவர் மனைவி மோனிசா. இவர்களுக்கு வைபப் கார்த்திக்,3, என்ற குழந்தை இருந்தது.
நேற்று மோனிஷா, தன் மூன்று வயது குழந்தை வைபப் கார்த்திக்தை அழைத்துக் கொண்டு, காஞ்சிக்கோவில், கவுண்டன்பாளையத்தில் உள்ள தன் தந்தை சாமியப்பன், வீட்டிற்கு வந்தார். பிற்பகலில் அனைவரும் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது குழந்தை வைபப் கார்த்திக் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். சாப்பிட்டு முடித்த பின், விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காணவில்லை என்று தேடும் போது, வீட்டுக்கு எதிர்ப்புறம் உள்ள ஊர் பொது கிணற்றில் தவறி குழந்தை விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். குழந்தையை எடுத்துக் கொண்டு நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என கூறினார். காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
