ADDED : பிப் 21, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
சி.எஸ்.நகர் நந்தவன தோட்டத்தை சேர்ந்தவர் சம்சுதீன்.
பி.பெ.அக்ரஹாரம் மற்றும் நந்தவன தோட்டம் பகுதியில் கறிக்கடை
வைத்துள்ளார். இவர் கடையில், 14 வயது சிறுவன் பணியாற்றுவதாக, சைல்டு
லைன் அமைப்புக்கு தகவல் சென்றது. இதையடுத்து வீரப்பன்சத்திரம்
போலீசாருடன் இணைந்து, மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு குழு அலுவலர்
ஜெகநாதன் தலைமையிலான குழுவினர், கறிக்கடையில் ஆய்வில்
ஈடுபட்டனர். இதில் வேலையில் ஈடுபட்டிருந்த சிறுவனை மீட்டனர்.
வீரப்பன்சத்திரம் ஸ்டேஷனுக்கு சம்சுதீனை போலீசார் விசாரணைக்கு
அழைத்து சென்றனர்.

