/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாயில் கருப்பு துணி கட்டி கிறிஸ்தவர்கள் போராட்டம்
/
வாயில் கருப்பு துணி கட்டி கிறிஸ்தவர்கள் போராட்டம்
ADDED : ஆக 04, 2025 08:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆள் கடத்தல் மற்றும் கட்டாய மத மாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக, கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து கிறிஸ்தவ அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் ஈரோட்டில், அக்ரஹாரம் அருகில் உள்ள லுார்து மாதா ஆலய வளாகத்தில், கிறிஸ்தவர்கள் நேற்று அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டிருந்தனர். கன்னியாஸ்திரிகள் கைதை கண்டித்தவர்கள், இந்த விவகாரத்தில் உரிய நீதி கிடைக்கவும் வலியுறுத்தினர். நுாற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

