ADDED : பிப் 19, 2026 04:22 AM

ஈரோடு: ஏசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூர்ந்து, 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடிப்பது வழக்கம். இதன்படி நடப்பாண்டிற்கான தவக்காலம், நேற்று சாம்பல் புதன் பிரார்த்தனையுடன் துவங்கியது.
ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதனிடையே கடந்த குருத்தோலை ஞாயிறு தினத்தில், கிறிஸ்தவர்கள் ஊர்வல-மாக எடுத்து வந்த குருத்தோலைகளை சேகரித்து, அதனை சுட்டு எரித்து சாம்பலாக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் சிறப்பு திருப்ப-லியை தொடர்ந்து, கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் சிலுவை அடையாளமாக பூசப்பட்டது. மாலை 6:00 மணிக்கும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதேபோல் சி.எஸ்.ஐ. பிரப் நினைவு தேவாலயம், ரயில்வே காலனி திரு இருதய ஆண்டவர் ஆலயம் என மாநகரில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்-றது.
