/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் கிறிஸ்துமஸ் விழா கோலாகல ம்
/
ஈரோட்டில் கிறிஸ்துமஸ் விழா கோலாகல ம்
ADDED : டிச 26, 2024 01:42 AM
ஈரோடு, டிச. 26-
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, ஈரோடு ஸ்டேட் வங்கி சாலையில் உள்ள அமல அன்னை ஆலயத்தில், நள்ளிரவில் ஏசு கிறிஸ்து பிறப்பு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் குழந்தை ஏசு கிறிஸ்துவின் சொரூபம், ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட குடிலில் வைத்து பிரார்த்தனை நடத்தப்பட்டது.
ஈரோடு சி.எஸ்.ஐ., பிரப் தேவாலயத்தில் நேற்று காலை, ஆயர் காட்பிரே ஸ்டீபன் தலைமையில் சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கு ஞானஸ்தானம் வழங்கப்பட்டது. மாலையில் குடும்ப பாடல் ஆராதனை நடந்தது. ஈரோடு ரயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயத்திலும் சிறப்பு ஆராதனை நடந்தது. மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில், நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 162 தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
* அந்தியூரில், சி.ஐ.ஜி., மிஷன், என்.எஸ். நினைவு தேவாலயம், நகலுார் புனித செபஸ்தியர் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நேற்று, ஏராளமான கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.