ADDED : டிச 15, 2025 06:11 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஸ்டார், ட்ரீ உள்ளிட்ட பொருட்களின் விற்பனை, ஈரோட்டில் சூடு பிடித்துள்ளது.
கிறிஸ்துமஸ் வரும், 25ல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு மாநகரில் கிறிஸ்தவர்கள் வாங்க ஸ்டார், ட்ரீ, கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள் விற்பனை களை கட்டியுள்ளது.இதுகுறித்து கடைக்காரர்கள் கூறியதாவது: கிறிஸ்துமஸ் ஸ்டார், ரூ.10 முதல் ரூ.1,145 வரை; ட்ரீ ரூ.45 முதல் ரூ.8,950 வரை; சீரியல் லைட் ரூ.75 முதல் ரூ.895; சாண்டா கிளாஸ் உடை, ரூ.295 முதல் ரூ.1,695; குடில் செட் ரூ.295 முதல் ரூ.4,850; கிறிஸ்துமஸ் மரத்தில் மாட்டும் பொருட்கள் ரூ.30 முதல் ரூ.700; தோரணங்கள் ரூ.25 முதல் விற்பனைக்கு உள்ளது. வண்ண விளக்குகளால் ஆன கிறிஸ்துமஸ் ஸ்டாரை, விரும்பி வாங்கி
செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
