ADDED : ஜன 01, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, ஜன. 1-
பெருந்துறையில் சென்னிமலை ரோட்டில் சி.எஸ்.ஐ., சர்ச் உள்ளது. கடந்த, 27ம் தேதி நள்ளிரவில் சர்ச்சில் புகுந்த களவாணி, உண்டியலை உடைத்து, பணத்தை திருடி சென்றான். புகாரின்படி பெருந்துறை போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவின் அடிப்படையில் விசாரித்தனர்.
இந்நிலையில் திருட்டில் ஈடுபட்ட முசிறி அருகேயுள்ள தாண்டவம்பட்டியை சேர்ந்த சபாபதியை, 29, கைது செய்தனர். சபாபதியிடம், ௬,௦௦௦ ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

