/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொடர் போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு., ஆதரவு
/
தொடர் போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு., ஆதரவு
ADDED : அக் 07, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, உடனடி ஊதிய உயர்வு, ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு அதே நாளில் பண பலன்களை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் சென்னிமலை சாலை, அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன், அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம், ஓய்வு பெற்ற தொழிலாளர் அமைப்பு சார்பில், 5௦வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்றும் நடந்தது.
ஓய்வு பெற்ற அமைப்பு தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார்.இவர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யு., மற்றும் சார்பு அமைப்புகள் சார்பில் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், செயலர் மாரப்பன் முன்னிலையில் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.