/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கட்டுமான பொருள் விலை உயர்வால் சிவில் இன்ஜினியர்கள் ஆர்ப்பாட்டம்
/
கட்டுமான பொருள் விலை உயர்வால் சிவில் இன்ஜினியர்கள் ஆர்ப்பாட்டம்
கட்டுமான பொருள் விலை உயர்வால் சிவில் இன்ஜினியர்கள் ஆர்ப்பாட்டம்
கட்டுமான பொருள் விலை உயர்வால் சிவில் இன்ஜினியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 13, 2025 02:19 AM
ஈரோடு :தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு காளை மாட்டு சிலை அருகே, ஒரு நாள் வேலை நிறுத்தத்துடன், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஈரோடு மாவட்ட கட்டட பொறியாளர் சங்க தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். செயலர் குமரவெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலை உயர்வை கட்டுப்படுத்தி முறையான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். கல் குவாரிகளை அரசுடமையாக்கினால், அதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய், மக்களுக்கு தரமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கும். ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும். கட்டுமான பொருட்கள் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும். தற்போதைய கட்டட அனுமதி கட்டண உயர்வை குறைக்க வேண்டும். விவசாயத்துக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய தொழிலாக உள்ள கட்டுமான தொழிலை காக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.