/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
3 மணி நேர மின் தடையால் 10ம் வகுப்பு மாணவர் அவதி
/
3 மணி நேர மின் தடையால் 10ம் வகுப்பு மாணவர் அவதி
ADDED : மார் 29, 2024 05:02 AM
கோபி: மூன்று மணி நேர மின்
தடையால், கோபியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வர்கள் இரவு நேரம் படிக்க வழியின்றி அவதியுற்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சிக்கு உட்பட்ட, ௨௭வது வார்டு சீதாலட்சுமிபுரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, 9:45 மணிக்கு மின் தடை ஏற்பட்டது. மூன்று மணி நேரம் கழிந்து, 12:45 மணிக்கு மின் வினியோகம் கிடைத்தது.
தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. திடீர் மின்தடையால் படிக்க முடியாமல், மாணவ-மாணவியர் அவதிப்பட்டனர். பலர் மெழுகுவர்த்தி, மொபைல்போன் வெளிச்சத்தில் படிக்க நேரிட்டது. அதேசமயம் குழந்தைகள், பெரியவர்கள் என மக்களும் துாக்கத்தை இழந்து பரிதவித்தனர்.
இதுகுறித்து கோபி மின் வாரிய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, 'சீதாலட்சுமிபுரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பியூஸ் போனதால், மின்தடை ஏற்பட்டதும், வெகுநேரம் கழிந்த பிறகே மக்களிடம் இருந்து புகார் கிடைக்கப் பெற்று, சரி செய்யப்பட்டது' என்றும் தெரிவித்தனர். கோபி கோட்ட பகுதியில் மின் தடை ஏற்பட்டால், 94458-52177 என்ற எண்ணில் தகவல் தெரிவித்தால், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

