தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கீரிப்பள்ளம் ஓடையில் துாய்மை பணி

கீரிப்பள்ளம் ஓடையில் துாய்மை பணி

கீரிப்பள்ளம் ஓடையில் துாய்மை பணி


UPDATED : மே 08, 2026 07:03 AM

ADDED : மே 08, 2026 03:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 07:03 AM ADDED : மே 08, 2026 03:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபி:கோபியில் நேற்று முன்தினம் இரவு, பலத்த காற்று மற்றும் இடியுடன், 31.20 மி.மீ., மழை பெய்தது. இதனால் கோபி நகரின் மத்தியில் ஓடும் கீரிப்பள்ள ஓடையில், குடியிருப்புகளின் கழிவுநீருடன், மழைநீரும் பெருக்கெடுத்து ஓடியது.

கோபி பஸ் ஸ்டாண்ட் வெளியே, ஆட்டோ ஸ்டேண்ட் அருகே பிரதான கீரிப்பள்ள ஓடையில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமிப்பால் மழைநீர் சீராக பயணிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதேசமயம் கீரிப்பள்ள ஓடையின் வழித்தடத்தில், நுாற்றுக்கணக்கான காலி குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில் குவிக்கப்பட்டதால், அவை ஆகாயத்தாமரை செடியுடன் சேர்ந்து, மழைநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் கோபி நகராட்சி துப்புரவு பணியாளர்கள், கீரிப்பள்ளம் ஓடையில் இறங்கி, ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

Image 1574112


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us