/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆக்கிரமிப்பு நிலம் அகற்றும் விவகாரம்; அந்தியூர் வருவாய் துறையினர் 'சடுகுடு'
/
ஆக்கிரமிப்பு நிலம் அகற்றும் விவகாரம்; அந்தியூர் வருவாய் துறையினர் 'சடுகுடு'
ஆக்கிரமிப்பு நிலம் அகற்றும் விவகாரம்; அந்தியூர் வருவாய் துறையினர் 'சடுகுடு'
ஆக்கிரமிப்பு நிலம் அகற்றும் விவகாரம்; அந்தியூர் வருவாய் துறையினர் 'சடுகுடு'
ADDED : ஜூலை 13, 2024 08:08 AM
அந்தியூர்: அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் பஞ்., கிணத்தடியில், பர்கூர் வனப்பகுதி அடிவாரத்தில், வருவாய் துறைக்கு சொந்த-மான 5 ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்தனர்.
இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்-துள்ளதாக கூறப்படும் மகாலிங்கம், முத்துசாமி ஆகியோர், நீதி-மன்றத்தில் தொடுத்த வழக்கில், 2016ல் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதை எதிர்த்து வருவாய் துறையினர் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில் மக்கள் அளித்த புகாரின்-படி, ஆக்கிரமிப்பு நிலத்தை அளவீடு செய்து மீட்பதற்காக, வருவாய் துறை அதிகாரிகள், அந்தியூர் போலீசாருடன் கடந்த வாரம் சென்றனர். நிலத்தை உரிமை கொண்டாடும் மகாலிங்கம், முத்துசாமி குடும்பத்தினர், 20க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகையிட்டு தடுத்தனர். நீதிமன்ற உத்தரவுடன் வந்து, நிலத்தை அளவீடு செய்யுமாறு கூறவே, வருவாய் துறையினர் திரும்பி விட்டனர்.இந்நிலையில் அந்தியூர் வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர், அந்தியூர், வெள்ளித்திருப்பூர் போலீசார் என, 50க்கும் மேற்பட்டோர் நிலத்தை அளவீடு செய்ய நேற்று வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு பெண், டீசலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவர் மீது தண்ணீர் ஊற்றி, டீசல் கேனை பறித்தனர். இதனால் இரண்டாவது முறையாக வருவாய் துறை அதிகாரிகள் திரும்பி சென்றனர். அதேசமயம் வரும், ௧௫ம் தேதி மீண்டும் வருவோம் என்று தெரிவித்தனர்.