மூடப்பட்ட டாஸ்மாக் 'எலைட்' மதுக்கடை மீண்டும் திறப்பு
மூடப்பட்ட டாஸ்மாக் 'எலைட்' மதுக்கடை மீண்டும் திறப்பு
ADDED : ஜூன் 20, 2026 05:55 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழகத்தில்
கோவில், பள்ளி மற்றும் பஸ் ஸ்டாண்ட் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களில்
செயல்பட்ட, டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி
ஈரோடு மாவட்டத்தில், 42 கடைகள் மூடப்பட்டதாக, டாஸ்மாக் அதிகாரிகள்
தெரிவித்தனர். இதில் உயர் ரக மது விற்கப்பட்ட 'எலைட்' மதுக்கடைகளும்
இருந்தன.
இந்நிலையில் ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் மூடப்பட்ட
'எலைட்' மதுக்கடை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. அதேசமயம் கடைக்கு
பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதேபோல் பவானியிலும் ஒரு கடை
திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டத்தில் மூடப்பட்ட மற்ற 'எலைட்'
மதுக்கடைகளும் சில நாட்களில் திறக்கப்படலாம் என்றும், அதற்கான வேலை
நடந்து வருவதாகவும், டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.
