/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமித்ஷாவை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
அமித்ஷாவை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 22, 2024 01:35 AM
அமித்ஷாவை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
ஈரோடு, டிச. 22-
அம்பேத்கர் குறித்து அவதுாறாக பேசிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, ஈரோடு, சூரம்பட்டிவலசில் மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய குழு உறுப்பினர் சண்முகம், அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரகுராமன், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் பேசினர். அம்பேத்கர் குறித்து அவதுாறாக பேசியதற்காக அமித்ஷா பதவி விலக வேண்டும். இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும் ஈடுபடுவதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.