/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் மறியல்
/
கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் மறியல்
ADDED : பிப் 28, 2024 02:01 AM
பவானி:அம்மாபேட்டை
அருகே செம்படாபாளையத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.
இதை குறிச்சிக்கு இடம் மாற்ற, சங்க உறுப்பினர்கள் மத்தியில் எதிர்ப்பு
கிளம்பியுள்ளது. இதனால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சங்க அலுவலகம் எதிரில், நேற்று காலை திடீர் சாலை மறியலில்
ஈடுபட்டனர். கோபி கூட்டுறவு சங்க துணை பதிவாளர் முத்து சிதம்பரம்,
அம்மாபேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 'கூட்டுறவு கடன் சங்க
தலைமை அலுவலகத்தை இங்கு கட்டுவதற்கு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே, மறியலை
கைவிடுவோம்' என்றனர். இதை தொடர்ந்து 'தலைமை இடம் செம்படாபாளையத்திலும்,
கிளை அலுவலகம் குறிச்சியிலும், ஒரே நேரத்தில் கட்டப்படும்' என அலுவலர்கள்
உறுதி கூறவே, மறியலை கைவிட்டனர். மறியலால் குறிச்சி--பூனாச்சி ரோட்டில்,
ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

