ADDED : ஜூலை 25, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம், ஊதியூர் அருகே உள்ள பங்காம்பாளையத்தில், சேவல் வைத்து சூதாட்டம் நடப்பதாக ஊதியூர் போலீசாருக்கு தகவல் சென்றது. போலீசார் சோதனையில் சேவல் சண்டை வைத்து சூதாட்டம் நடந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக கொடுவாயை சேர்ந்த நாகராஜ், 45, சம்பத்குமார், 49, முத்துக்குமார், 38, முருகேஷ், 41, வெங்கடசுப்பிரமணியம், 35, என ஐந்து பேரை கைது செய்து, 7,600 ரூபாய் மற்றும் இரு சேவல்களை பறிமுதல் செய்தனர்.