ADDED : ஏப் 05, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
ஈரோடு : கொடுமுடி, பெரும்பரப்பு, கிளவன்காட்டு தோட்டத்தில், சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக, கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில், சூதாட்டம் நடப்பது உறுதியானது. சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த,
கொடுமுடி, சென்னிமலை, சிவகிரி, கரூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 24 வயது முதல் 39 வயது வரையிலான ஏழு பேரை கைது செய்தனர். உயிருடன் ஆறு சேவல், இறந்த நிலையில் நான்கு சேவல், நான்கு கத்தி, 40 ஆயிரம் ரூபாய், பொலீரோ காரை பறிமுதல் செய்தனர்.
