ADDED : ஏப் 19, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
காங்கேயம் : திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 10,058 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 52.55 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 35.95 ரூபாய்க்கும் ஏலம் போனது.
இதேபோல், 905 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ, 115 ரூபாய் முதல் 153.35 ரூபாய் வரை ஏலம் போனது.* முத்துார் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூட மையத்தில் நடந்த ஏலத்துக்கு, 41 மூட்டைகளில், 3,225 கிலோ எள்ளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 135 ரூபாய் முதல், 155 ரூபாய் வரை, 4.68 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
