தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.4.50 லட்சத்துக்குதேங்காய் ஏலம்

ரூ.4.50 லட்சத்துக்குதேங்காய் ஏலம்

ரூ.4.50 லட்சத்துக்குதேங்காய் ஏலம்


ADDED : மார் 29, 2026 02:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 02:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, :அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 22,427 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ பச்சை தேங்காய், 37 ரூபாய் முதல் 44.60 ரூபாய்; கசங்கல் தேங்காய் கிலோ, 47.19 ரூபாய் முதல் 57 ரூபாய் வரை, 9,006 கிலோ தேங்காய், 4.50 லட்சம் ரூபாய்க்கு

விற்பனையானது.

வெள்ளகோவில் தாலுகா அறிவிப்பு 'கானல் நீர்'இந்த தேர்தலிலாவது சாத்தியப்படுமா?

திருப்பூர், வெள்ளகோவிலை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை, 15 ஆண்டுகள் கடந்தும் வலுத்து வருகிறது. ஆனால், தி.மு.க. அ.தி.மு.க கட்சிகள் செவிசாய்க்கவில்லை.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில், 16 வருவாய் கிராமங்கள், ஒன்பது ஊராட்சிகள் உள்ளது. நகரப் பகுதியில், 3.48 லட்சம் பேரும், ஊரக பகுதியில், 60 ஆயிரம் பேர் என நான்கு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஜவுளி உற்பத்தி, விசைத்தறி, நுாற்பாலை, அரிசி ஆலைகள் உள்ளது; விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.காங்கயம் தாலுகாவில் இருந்து வெள்ளகோவிலை பிரித்து தனி தாலுகாவாக உருவாக்க, 1988ல் அப்போதைய பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோரிக்கை 2005ல் எழுந்தது. 2014ல் திருப்பூரை வடக்கு மற்றும் தெற்கு இரண்டாகவும், அவிநாசி தாலுகாவில் இருந்து, ஊத்துக்குளி தாலுகாவும் பிரிக்கப்பட்டது. ஆனால், வெள்ளகோவில் அறிவிப்பு வெளியாகவில்லை.

கடந்த, 2025 ஜன. மாதம், நிர்வாக வசதிக்காக காங்கயம், தாராபுரம் தாலுகாவில் இருந்து கன்னிவாடி, சங்கரண்டாம்பாளையம், மாம்பாடி, புங்கத்துறை உள்ளிட்ட கிராமங்கள் பிரிக்கப்பட்டு வெள்ளகோவில் தாலுகா உருவாக்கப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. தொட்டப்பட்டி, கன்னிவாடி, நத்தக்காடையூர், ஊதியூர் உள்ளிட்ட 30 க்கும் அதிகமான பகுதிகளை இணைக்க கருத்துரும் தயாரிக்கப்பட்டது. ஆனால், காகித அளவில் மட்டுமே உள்ளது. அடுத்த மாதம், 23ல் தேர்தல் நடக்கிறது. மூன்றாவது முறையாக நடப்பு தேர்தலிலும் வெள்ளகோவில் தாலுகா என்ற அறிவிப்பு இல்லாமல், வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் ஓட்டளிக்க

ஓட்டுச்சாவடிக்கு வர உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us