ADDED : மே 30, 2026 04:51 AM
கோபி : கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் அதன் தொட்டி என, 1.04 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில், குறைந்தபட்சமாக கிலோ, 31 ரூபாய், சராசரியாக, 32 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 3,089 கிலோ தேங்காய்கள், 97 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
அதேபோல் தேங்காய் பருப்பு, குறைந்தபட்சமாக கிலோ, 122 ரூபாய், அதிகபட்சமாக, 125 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 51 கிலோ தேங்காய் பருப்பு, 6,453 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் தொட்டி, ஒரே விலையாக கிலோ, 27 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 31 கிலோ தேங்காய் தொட்டி, 833 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் அதன் தொட்டி என மொத்தம், 1.04 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
