ADDED : ஜூன் 12, 2025 01:43 AM
அ நிறம் | அளவு
காங்கேயம், திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் வெள்ளகோவில், வாணியம்பாடி, குஜிலியம்பாறை, விளாத்திகுளம், நாச்சிபாளையம், கரட்டுப்பாளையம், முத்துார் பகுதி விவசாயிகள், 64 பேர், 18 ஆயிரம் கிலோ எடை கொண்ட
தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். முதல் தரம் பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ, 233.23 ரூபாய், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 136.89 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 38 லட்சத்து, 8,000
ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
