ADDED : மே 30, 2026 05:10 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை :பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ரூ.10.90 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.
பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 29 ஆயிரத்து, 500 கிலோ எடை உள்ள, ஒரு லட்சத்து, 79 ஆயிரத்து, 772 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், கருப்பு தேங்காய் குறைந்தபட்சமாக கிலோ, ரூ.36, அதிகபட்சமாக, ரூ.42.55க்கு விற்பனையானது. வெள்ளை தேங்காய் குறைந்தபட்சமாக கிலோ ரூ. 28.10, அதிகபட்சமாக, ரூ.35.85க்கு விற்பனையானது. தண்ணீர் வற்றிய தேங்காய் கிலோ ரூ.45.10க்கு விற்பனையானது.
