ADDED : மே 09, 2026 04:24 AM
பெருந்துறை, பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 63 ஆயிரத்து 569 கிலோ எடையில், 22 ஆயிரம் தேங்காய்களை கொண்டு வந்தனர். கருப்பு தேங்காய் கிலோ, 39.59 ரூபாய் முதல் 46.10 ரூபாய் வரை விற்றது. வெள்ளை தேங்காய் கிலோ, 30 ரூபாய் முதல் 44.20 ரூபாய் வரை, 9.25 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. குறைந்த விலை (கிலோ), 36 ரூபாய், அதிகவிலை, 40 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 1,017 கிலோ தேங்காய், 37 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு ஏலத்தில் ஒரே விலையாக கிலோ, 132 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 85 கிலோ தேங்காய் பருப்பு, 3,473 ரூபாய்க்கு விற்பனையானது.
