தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோவை - சென்னை இன்டர்சிட்டி ரயில் ரத்து

கோவை - சென்னை இன்டர்சிட்டி ரயில் ரத்து

கோவை - சென்னை இன்டர்சிட்டி ரயில் ரத்து


ADDED : மார் 24, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 06:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்ஜோலார்பேட்டை - தொட்டம்பட்டி பிரிவுகளுக்கு இடையே தானியங்கி சிக்னல் மேம்பாட்டு பணி இன்று நடக்கிறது. இதனால், கோவை - சென்னை இன்டர்சிட்டி ரயில் ரத்து செய்யப்படுகிறது.

இன்று காலை, 6:20 மணிக்கு கோவையில் புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680), மதியம், 2:30 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கும் புறப்படும் ரயில் (எண்:12679) இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது._இன்று (24ம் தேதி) கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் (எண்:22666) வழக்கமான வழித்தடம் மாற்றி, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக இயக்கப்படும்; திருப்பத்துார், குப்பம், கிருஷ்ணராஜபுரம் செல்லாது.

சென்னை - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (எண்:20643) மதியம், 2:15 மணிக்கு பதிலாக, இரண்டு மணி நேரம் தாமதமாக, மாலை 4:15 மணிக்கு புறப்படும்._கோவை - சென்னை கோவை எக்ஸ்பிரஸ் (எண்:12676) மதியம், 3:15 மணிக்கு பதிலாக, இரண்டு மணி நேரம் தாமதமாக மாலை, 5:15 மணிக்கு புறப்படும். எர்ணாகுளம் - டாடா நகர் எக்ஸ்பிரஸ், ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் இரண்டும் இன்று ஒரு மணி நேரம், 30 நிமிடம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us