ADDED : ஏப் 25, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை, ஏசென்னிமலையில் மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்களும், செவ்வாய், சஷ்டி, கிருத்திகை நட்சத்திர தினங்களில் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். தற்போது பள்ளி, கல்லுாரி விடுமுறையால் பெற்றோர்களுடன் குழந்தைகள், மாணவ, மாணவியரும் தரிசனத்துக்கு வருகின்றனர்.
கோடை வெயில் கொளுத்துவதால், நடந்து செல்லும் வயதானோர், சிறுவர்-சிறுமியர் அவதிக்கு ஆளாகின்றனர். இதை தவிர்க்க கோவில் உட்பிரகாரம் மற்றும் வெளிப்பகுதியில் நடக்கும் பகுதியில் 'காயர் மேட்' போட்டுள்ளனர். இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும், பாதங்களை சூடு தாக்குவது இல்லை என்றும், பக்தர்கள் தெரிவித்தனர்.
