/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு பள்ளி வகுப்பறையில் இடிந்த கூரை
/
அரசு பள்ளி வகுப்பறையில் இடிந்த கூரை
ADDED : ஜூலை 22, 2025 01:29 AM
கோபி, கோபி அருகே கூகலுாரில் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில், 322 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இரு தளங்களுடன், 64.33 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட நான்கு வகுப்பறை கட்டடம், 2024 ஜூலை மாதம் திறப்பு விழா கண்டது. விடுமுறை முடிந்து பள்ளிக்கு நேற்று மாணவர்கள் வந்தனர். புதிய கட்டடத்தின் முதல் தளத்தில் '7ஏ' வகுப்பறையில் மின் விசிறி அமைத்துள்ள பகுதியில் கான்கிரீட் கூரை உடைந்து தரையில் விழுந்திருந்தது. இதனால் பிரிவை சேர்ந்த, 29 மாணவர்களும் மாற்றிடத்தில் அமர வைக்கப்பட்டனர்.
தகவலறிந்த பெற்றோர் குவிந்ததால், கோபி பி.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில், யூனியன் கட்டட பொறியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பி.டி.ஓ., ரவிச்சந்திரன் கூறுகையில், 'மேற்கூரையில் பெயர்ந்து விழுந்த பகுதியில் கூடுதல் பூச்சை நீக்கிவிட்டு பராமரிப்பு மேற்கொள்ளப்படும்' என்றார்.