ADDED : டிச 04, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.
பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்தகம், மருந்து இருப்பு, ஆய்வகம், அவசர சிகிச்சை பிரிவு, படுக்கை வசதி, கழிப்பறை, புற மருத்துவ பயனர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை, சமையலறை, வாகனம் நிறுத்துமிடம், சிகிச்சை முறைகள் குறித்து பார்வையிட்டு, விபரங்களை கேட்டறிந்தார். மருத்துவமனைக்கு வருகை புரியும் நோயாளி களின் தேவை, அதற்கான உபகரணங்கள் உள்ள விபரம், கூடுதல் தேவைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். நோயாளி களிடம், கூடுதல் வசதிகள், குறைகள் பற்றி விபரம் சேகரித்தார். இணை இயக்குனர் (நலப்பணிகள்) வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

