/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விரைவான தீர்வுக்கு கலெக்டர் உத்தரவு
/
விரைவான தீர்வுக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : ஆக 01, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோட்டில் சங்கர் மஹாலில் நடக்கும், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடந்தது. இதை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். மக்கள் மனுக்களுக்கு, ஒப்புகை சீட்டு வழங்கி, அவற்றுக்கு உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு வலியுறுத்தினார்.
இதுவரை பெறப்பட்ட மனுக்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கேட்டறிந்தார். பின் சத்தி, கூகலுார், சென்னிமலை அருகே பசுவப்பட்டி உட்பட பல்வேறு இடங்களில் நடந்த முகாமை, கலெக்டர் பார்வையிட்டார். ஆய்வின்போது மாநககராட்சி துணை ஆணையர் தனலட்சுமி, உதவி ஆணையர் அண்ணாதுரை, தாசில்தார் முத்துகிருஷ்ணன் உடனிருந்தனர்.

