/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
10 அடிக்கு மிகாமல் சிலைகளை வையுங்கள்' முன்னேற்பாடு கூட்டத்தில் கலெக்டர் யோசனை
/
10 அடிக்கு மிகாமல் சிலைகளை வையுங்கள்' முன்னேற்பாடு கூட்டத்தில் கலெக்டர் யோசனை
10 அடிக்கு மிகாமல் சிலைகளை வையுங்கள்' முன்னேற்பாடு கூட்டத்தில் கலெக்டர் யோசனை
10 அடிக்கு மிகாமல் சிலைகளை வையுங்கள்' முன்னேற்பாடு கூட்டத்தில் கலெக்டர் யோசனை
ADDED : ஆக 21, 2025 02:09 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை, விநாயகர் சிலைகள் வழிபாடு, நீரில் கரைக்கும் ஊர்வல பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து அமைப்பு நிர்வாகிகள், அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் கந்தசாமி பேசியதாவது: விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகள் வைத்தல், வழிபாடு செய்தல், நீரில் கரைப்பதற்கான வழிகாட்டுதலுடன் அரசாணை உள்ளது. சிலை பொறுப்பாளர், அப்பகுதி சப்-கலெக்டர் அல்லது ஆர்.டி.ஓ.,விடம் படிவம்-1ல், என்.ஓ.சி.,யுடன்
விண்ணப்பிக்க வேண்டும்.
அந்நிலத்துக்கு உரிய தடையின்மை சான்று பெற வேண்டும். பந்தலுக்கு தீத்தடுப்பான்கள் வைத்திருக்க வேண்டும். தீயணைப்பு, போலீஸ் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். தற்காலிக மின் வசதி, மின்வாரியத்திடம் பெற வேண்டும் என்பது உட்பட முழு அனுமதி பெற வேண்டும். 10 அடிக்கு மிகாமல் சிலைகள் இருக்க வேண்டும்.
மத வழிபாட்டு தலம், மருத்துவமனை, கல்விக்கூடம் அருகே சிலை வைக்கக்கூடாது. ஒலி பெருக்கியை காலை, மாலை தலா, 2 மணி நேரம் மட்டும் பயன்படுத்த வேண்டும்.பிரசாரம், பாடல்கள் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவை மீறக்கூடாது. சிலைகளை கரைக்க வாகனங்களில் எடுத்து செல்லுதல், அதற்கான வாகன அனுமதி, கரைக்கும் இடங்கள், ஊர்வல வழிகளை முறையாக பின்பற்ற வேண்டும். மலர்கள், துணிகள், அலங்கார பொருட்கள், பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை சிலை கரைக்கும் முன் அகற்ற வேண்டும். கரைக்கப்படாத பொருட்களை சேகரித்து உரிய வகையில் அழிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
எஸ்.பி., சுஜாதா, கோபி சப் - கலெக்டர் சிவானந்தம், ஏ.டி.எஸ்.பி., க்கள் வேலுமணி, விவேகானந்தன், தங்கவேல், ஈரோடு ஆர்.டி.ஓ., சிந்துஜா
உட்பட பலர் பங்கேற்றனர்.

