ADDED : நவ 07, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லுாரி
மாணவிகள் மாயம்
பெருந்துறை, நவ. 7-
பெருந்துறை அடுத்த, கவுண்டன்பாளையத்தை சேர்ந்த மெகபூ பாட்ஷா, 56, தறி தொழிலாளி. இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரின் மூத்த மகள் அனார்கலி, 22, பெருந்துறையில் பாலிடெக்னிக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 4ம் தேதி வழக்கம்போல் கல்லுாரி சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. தனது தங்கைக்கு, இனிமேல் வீட்டுக்கு வரமாட்டேன், சாதித்து விட்டு தான் வருவேன் என்று வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். தோழிகளிடம் விசாரித்தபோது, உடன் படிக்கும், வெண்டிபாளையத்தை சேர்ந்த, 18 வயது மாணவியும் காணவில்லை என்று தெரிய வந்தது. இதுகுறித்து, பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.