மாணவியை கட்டிப்பிடித்த கல்லுாரி பேராசிரியர் கைது
மாணவியை கட்டிப்பிடித்த கல்லுாரி பேராசிரியர் கைது
ADDED : ஜூன் 22, 2026 03:43 AM

அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடில், மாணவியை கட்டிப்பிடித்த, இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு, திண்டல் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம், 47. ஈரோடில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியரான இவர், மற்றொரு கல்லுாரியில் நடந்த பருவத்தேர்வுக்கு, அறை கண்காணிப்பாளராக சென்றார். அப்போது தேர்வெழுதி விட்டு, விடைத்தாளை கொடுக்க வந்த, 20 வயது மாணவியை, பின்புறமாக கட்டிப்பிடித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி, ஈரோடு மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், போலீசார், ராஜாராமை கைது செய்தனர். ராஜாராம் திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
