ADDED : ஆக 20, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகே கல்லுாரி மாணவி மாயமானார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை
சேர்ந்தவர் ரவிக்குமார், 41. இவர் சத்தியமங்கலம் பாரதி நகரில்
குடியிருந்தபடி, திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்து
வருகிறார். இவரது மகள் மிலாசினி, 19, காஞ்சிபுரம் அண்ணா
பல்கலைக்கழக உறுப்பு கல்லுாரியில் டி.இ., இரண்டாமாண்டு படித்து
வந்துள்ளார்.கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, உடல் நிலை சரியில்லை
என கூறி வீட்டுக்கு வந்துள்ளார். கடந்த, 17ம் தேதி இரவு முதல் இவரை
காணவில்லை. என்னை யாரும் தேட வேண்டாம் என கடிதம் எழுதி விட்டு
மாயமாகியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால், நேற்று முன்தினம்
காணாமல் போன தனது மகளை கண்டு பிடித்து தரக்கோரி, சத்தியமங்கலம்
போலீசில் ரவிக்குமார் புகார் அளித்துள்ளார்.
