ADDED : ஜூன் 29, 2026 05:42 AM
கோபி:கோபி
அருகே மோனக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் சஞ்சய், 19; கவுந்தப்பாடி
அருகே இயங்கும் கல்லுாரியில், பி.எஸ்.சி., - ஐ.டி., பிரிவில்
இரண்டாமாண்டு படித்தார். ஆர்-15 பைக்கில், கோபி அருகே பழைய
வள்ளியம்பாளையம் பிரிவில் சஞ்சய் நேற்று காலை, 11:00 மணிக்கு சென்றார்.
அதே பகுதி சாலையோரத்தில் நின்றிருந்த, டாடா ஏஸ் சரக்கு ஆட்டோ
மீது பைக் மோதியது. இதில் காயமடைந்த சஞ்சய், கோபி அரசு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரின் தாய்
மரகதவள்ளி புகாரின்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரிக்கின்றனர். இதே இடத்தில், 2024 செப்., 23ல் தனியார் பஸ்
மோதியதில், மொபட்டில் பயணித்த முதியவரும், அதே பஸ் படிக்கட்டில்
பயணித்த வாலிபரும் பலியாகினர். இதுவரை மூவர் இறந்த சூழலில், மீண்டும்
அப்பகுதியில் பேரிகார்டு அல்லது நிரந்தரமாக வேகத்தடை அமைக்க, வாகன
ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
