/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கார் கவிழ்ந்ததில் கல்லுாரி மாணவர் பலி
/
கார் கவிழ்ந்ததில் கல்லுாரி மாணவர் பலி
ADDED : நவ 22, 2025 02:18 AM
காங்கேயம், திருப்பூர் மாவட்டம் பல்லடம், மாணிக்காபுரம் கதிர்வேல், 20; திருப்பூர் பெருந்தொழுவு ஹரிஷ், 20; செவந்தம்பாளையம் தீபக், 20; அறிவொளி நகர் கார்த்திகேயன், 20; திருப்பூர் இடுவாய் பாரதிபுரம் கோகுலகிருஷ்ணன், 20; ஐந்து பேரும் சூலுார் அருகே தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு மாணவர். கொடைக்கானல் செல்வதற்காக கூண்டாய் வெர்னா காரில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். திருப்பூர்-தாராபுரம்ரோடு என்.காஞ்சிபுரம் செங்காட்டுதோட்டம் அருகே நள்ளிரவு, 11:00 மணியளவில் சென்றபோது சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் ஐந்து பேரும் பலத்த காயமடைந்தனர். திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மாணவர் கதிர்வேல் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஊதியூர் போலீசார் விசாரிக்
கின்றனர்.

